தமிழக நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதியை விரைவாக வழங்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், இந்த இணையதள வசதியை விரைவாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த புதிய AI அடிப்படையிலான முறை செயல்பாட்டுக்கு வந்தால், கட்டிட அனுமதி விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, காலதாமதத்தை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனுமதி வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து, பொதுமக்களுக்கு எளிதான மற்றும் விரைவான சேவைகள் கிடைக்க வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




