![]()
![]()
ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
‘இப்ப உனக்கு என்ன பிரச்சினை’?![]()
![]()
அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
‘எதுவும் பிரச்சினை இல்லை உங்க வேலையை பார்க்கலாம்’.![]()
![]()
ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
‘சரி என் மேலே தான் தப்பு…
இனி செய்யலை மன்னிச்சிடு’.![]()
![]()
அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
‘உங்களை மன்னிக்க நான் யார் ஸார்…
யாரோ தானே நான்’.![]()
![]()
ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
‘சரி ஓகே நான் கிளம்பறேன்’.![]()
![]()
அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
‘அதானே நான் எப்படி போனா உங்களுக்கென்ன?’![]()
![]()
ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
‘இனி இந்த தப்பை இன்னொரு தடவை செஞ்சா செருப்பால் அடி’![]()
![]()
அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
‘இதே தான் போன தடவையும் சொன்னீங்க…
அடிச்சிக்கிட்டீங்களா என்ன?’![]()
![]()
அவளாய் பார்த்து சமாதானமாகி, போனால் போகிறதென்று விட்டால் தான் உண்டு.
அதுவரை நீ சமாதானம் என்ற பெயரில் கொஞ்சியும் கெஞ்சியும் அங்கேயே தான் இருக்க வேண்டும்.![]()
![]()
எக்கேடாவது கெட்டு தொலை என்று விடவும் முடியாது,
இனியொரு முறை இப்படி நடக்காதென்று உறுதி மொழியும் கொடுக்க முடியாது.![]()
![]()
ஏனென்றால் இதற்கு முன் லட்ச தடவை அது நடந்திருக்கும்.![]()
![]()
அது நடந்த தேதி காலம் நிமிடம் வரை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கேள்வியாலே துளைத்தெடுப்பாள்.![]()
![]()
ஒரு சண்டை சங்கிலி தொடர்போல ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி நகரும்.![]()
![]()
அன்னிக்கு அது செஞ்சிங்களே,
அன்னிக்கு இப்படி சொன்னிங்களே,
கேக்கணும் நினைச்சேன்..
இப்பதான் ஞாபகத்துக்கு வந்ததுன்னு ஒண்ணு ஒண்ணா போகும்.![]()
![]()
இது எப்போது நடந்தது?
நான் சொன்னேனா?
முதலில் இது நடந்ததா என்று யோசித்து யோசித்து ஒன்று ஒன்றாக பதில் அளித்து வருவதற்குள்
ஏன்டா சண்டை போட்டோம்னு ஆயிடும் ஒவ்வொரு ஆண்களுக்கும்..![]()
![]()
![]()
ஆனாலும் விட மாட்டாங்க![]()
![]()
படித்ததில் பிடித்தது ![]()