கண்ணுக்கு அருகில் கருவளையம்..!! எளிய மருத்துவக் குறிப்பு..!!

முகத்தில் கண்ணுக்கு அருகில் கருவளையம், கரு நிறப் புள்ளிகள், கருப்பு நிற திட்டுக்கள் ஆகியன காணப்பட்டால் இவைகளுக்கு இருக்கிறது இயற்கை மருத்துவம்.

சாமந்திப் பூவின் இதழ்களை எடுத்துக்கொண்டு அதனை சற்று நீர் விட்டு நன்கு பசைபோல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான கடலை மாவு எடுத்துக்கொள்ள வேண்டும். தயிர் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இவற்றில் ஒரு ஸ்பூன் சாமந்திப் பூவின் பேஸ்ட் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தயிர் ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்கு ஒன்றாக கலந்து வைக்க வேண்டும்.  பின்னர் முகத்தை நன்கு கழுவி. இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்கு தடவி வைத்திருந்து சுமார் 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் செய்து வந்தால் முகத்தில் உள்ள மேற்கண்ட கருமை நிறங்கள் மாறி முகம் பளப்பளப்பாக இருக்கும்.

Read Previous

சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடைக்காரர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

இந்த நேரத்தில் எல்லாம் கனவு கண்டால் அது அப்படியே நடக்குமாம்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular