கம்பு சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே கம்பு என்பது அதிக நார்ச்சத்து மிக்க ஒரு உணவாகவும், தினம்தோறும் எதாவது ஒரு வகையில் குறிப்பாக வெயில் காலங்களில் கம்பு உணவு சாப்பிடுவார்கள். எடுத்துக்காட்டாக கம்மஞ்சோறு கம்மங்கூழ் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இதில் அதிக சத்து உள்ளது. இந்நிலையில் கம்பு சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கம்பு சாப்பிடலாம். கம்பள நார்ச்சத்து அதிகம் இருக்குது கொழுப்பு குறைவா இருக்கிறது தினமும் ஒருவேளை உணவாக கம்பை எடுத்து வந்தா உடல்ல இருக்கிற தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். செரிமான பிரச்சனைக்கு கம்பு ஒரு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. செரிமான கோளாறு இருக்கிறவங்க ஒருவேளை கம்பு உணவு எடுத்து வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்கி செரிமானம் நல்லா நடக்கும், கம்புல நார்ச்சத்து அதிகமாக இருக்கிறதால மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது குடலை சுத்தம் செய்யக்கூடிய கம்பு குடல் புற்றுநோயை தடுக்கவும் மிகவும் உதவுகிறது.
உடல் உஷ்ணம் குறைய கம்பு சார்ந்த உணவுகளை சாப்பிடலாம். குறிப்பாக கோடை காலங்களில் கம்பை கூலாகவோ கஞ்சியாகவோ செய்து அதில் சிறிதளவு மோர் சேர்த்து குடித்து வந்தால் வெயில் காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தணிக்க முடியும்.




