கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது?.. அதன் அறிகுறிகள் என்ன?.. தெரிஞ்சுக்கோங்க..!!

உடலில் உள்ள மிக முக்கியமான அதே நேரம் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் ஆகும்.

இது உடலில் ஓடும் இரத்ததிலிருந்து நச்சுகளை நீக்குகிறது, சர்க்கரை அளவை பராமரிக்கிறது மற்றும் நூற்றுக்கணக்கான பிற முக்கிய செயல்பாடுகளை உறுதி செய்கிறது.

இந்த கல்லீரல்,உங்கள் வயிற்றில் மேல் பகுதியில், வலது பக்கம், விலா எலும்புக் கூண்டுக்குக் கீழே அமைந்துள்ளது.

இந்த கல்லீரல் ஒழுங்காக செயல்பட்டால் மட்டுமே, உடலின் மற்ற உறுப்புகள் செயல்படும். கல்லீரல் பாதிப்படைந்தால், படிப்படியாக மற்ற உறுப்புக்கள் செயலிழக்க தொடங்கி விடும்.

சரி, இந்த கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டறிவது?

கல்லீரல் உஷ்ணமடைவது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். இதன் தொடர்ச்சியாக தான், கல்லீரலில் கொழுப்பு படிதல் ஏற்படுகிறது.

கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள்

கல்லீரலில் பிரச்சனைகள் பொதுவாக எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது, மன அழுத்தம், தூக்கமின்மை, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தவறான நேரத்தில் சாப்பிடுவது போன்றவற்றால் ஏற்படுகிறது.

கல்லீரல் பிரச்னை இருப்பதற்கான அறிகுறி, முதலில் நாக்கில் தோன்றும். அடிக்கடி வாயில் புண்கள் ஏற்படக்கூடும்.

கல்லீரலில் நச்சுகளின் காரணமாக வெப்பநிலையை அதிகரிக்கும் போது, அது உடலுக்கு வெளியேயும் பரவக்கூடும்.

இதனால் உடலில் தடிப்புகள் போல தோன்ற ஆரம்பிக்கும்.

அடுத்ததாக வாயில் தொடர்ந்து துர்நாற்றம் வீசும்.

அது, கல்லீரல் அழுக்கு படிந்துள்ளதற்கான அறிகுறி. கல்லீரலில் அதிகமாக அழுக்கு சேர துவங்கும்போது, அது வயிற்று கல்லீரலை வீங்க வைக்கும். அதனால், வயிற்று வலி ஏற்படும்.

Read Previous

விவசாயத்திற்கு இலவசமாக குழாய்கள் அமைக்கும் திட்டம்..!! தமிழ்நாடு அரசின் ரூ.15,000 நிதி உதவி பெறுவது எப்படி?..

Read Next

கம்பு சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular