கர்நாடகாவில் இளம்பெண் கொலை.. கணவர் கைது, போலீஸ் தீவிர விசாரணை..!!

 

 

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பிலகி தாலுகாவில், 23 வயதுடைய பாக்யஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த வழக்கில், அவரது கணவர் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் மீது சந்தேகம் காரணமாக இந்தக் குற்றச்சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பான காட்சிகளை கைப்பேசியில் பதிவு செய்து, பின்னர் தனது மனைவியின் பெற்றோருக்கு வீடியோ அழைப்பின் மூலம் காட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து பிலகி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றத்தின் பின்னணி மற்றும் அனைத்து சூழ்நிலைகளையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Read Previous

பள்ளி வளாகத்தில் ஆசிரியை மீது துணிகரம்.. 16 சவரன் தாலிச் செயின் பறிப்பு..!!

Read Next

நகங்களை நீளமாக வைத்திருக்கிறீர்களா?.. இந்த உடல்நல ஆபத்துகள் உங்களைத் தாக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular