கடந்த 10 ஆண்டுகளில் கல்லீரல் பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் நோயினால் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தாமதமாக நோயை கண்டறிதல் மரணத்துக்கு வழிவகை செய்கிறது. கல்லீரல் நோயின் அறிகுறியாக ரத்த வாந்தி, சுவாசிப்பதில் சிரமம், அடர் கருமை நிறத்தில் வெளியேறும் மலம், குழப்பம், மயக்க உணர்வு, மஞ்சள் காமாலை போன்றவை இருக்கும். இவ்வகை பிரச்சனை இருந்தால் தாமதமின்றி மருத்துவரை நாடவும்.




