வீட்டில் கஷ்டம் தொடங்குவதற்கு முன்னரே அதனை உணர்த்தும் அறிகுறிகள்..!!

வீட்டில் பண கஷ்டத்தினால் தான் மன கஷ்டங்கள் ஏற்படும் அந்த பண கஷ்டம் வருவதை முன்னரே உணர்த்தும் அறிகுறியாக சாஸ்திரங்கள் பலவற்றை கூறுகின்றன. அவை என்ன வென்று பார்ப்போம்.

அதாவது அனைவரும் வீட்டில் லக்ஷ்மி தேவி வாசம் செய்ய கூடிய துளசி செடியை வைத்திருப்போம். நமக்கு நிதி நெருக்கடி வர போகிறது என்றால் நம் வீட்டில் இருக்கும் துளசி செடி வாடி போகும் என வேதங்கள் பல கூறுகின்றன. மேலும் துளசி செடி வாடினால் அந்த வீட்டில் லக்ஷ்மி தேவி ஆனவள் வாசம் செய்யமாட்டாள். அதனால் பொருளாதார ரீதியில் பல நெருக்கடி வர கூடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மேலும் வீட்டில் கண்ணாடி உடைந்தால் அது கெட்ட சகுனத்தை குறிக்கும் என வேதங்கள் கூறுகின்றன. மேலும் கண்ணாடி உடைவதால் உங்கள் நிதி நிலைமை மோசமடைந்து வீட்டில் கெட்ட நேரம் ஆரம்பிக்க போகிறது எனவும் கூறுகின்றனர். மேலும் கண்ணாடி உடைந்தால் வீட்டில் யாருக்கோ பெரும் ஆபத்து வர போகிறது எனவும் உணர்த்துகிறதாம்.

மேலும் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்பட தவறாமல் வீட்டில் பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் வேதங்கள் கூறுகின்றன. மேலும் வீட்டில் தினமும் பூஜை செய்வதால் வீட்டில் லக்ஷ்மி தேவி வாசம் செய்வாள் எனவும் வீட்டின் பூஜை அறை மற்றும் வீட்டினை சுத்தமாக வைத்தால் லட்சுமி குடி இருப்பாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பூஜை அறை சுத்தம் இல்லமல் இருப்பதும் கெட்ட சகுனத்தை குறிக்கும்.

மேலும் காலகாலமாக நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்த ஓன்று அதாவது வீட்டிற்கு ஒரு பெரியவர்கள் வந்தால் எழும்பி நிற்க வேண்டும் என்பது அது அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை மேலும் அவ்வாறு அவர்களை நாம் மதிக்காமல் இருந்தாலும் அந்த வீட்டில் லக்ஷ்மி தேவி வாசம் செய்யமாட்டாள். வீட்டில் மகிழ்ச்சி என்ற ஓன்று இருக்காது எனவும் வேதங்கள் கூறுகின்றன. அதனால் தான் பெரியவர்களை மதிக்க வேண்டும் என முன்னோர்கள் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். நாமும் அதனை பின்பற்றுவோம்.

Read Previous

காகம் உங்கள் வீட்டின் அருகில் அடிக்கடி கத்துகிறதா..!! இது நல்லதா..? கெட்டதா..?

Read Next

ஆமை படத்தை வீட்டில் வைத்தால் நல்லதா..? கெட்டதா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular