இப்போதெல்லாம் உன் பெயர் வைத்த ஆட்களிடம் உணர்ச்சி வசப்படாமல் பேச முடிகிறது..
உன் பெயரை சொல்லி யாரோ யாரையோ அழைத்தால் திருப்பி பார்க்காமல் நடக்கிறேன் …
உன் முக ஜாடையில் யாரையேனும் காண நேர்ந்தாலும் மனம் அவர் பின்னே துள்ளி கொண்டு செல்வதில்லை …
நம் பழைய குறுஞ்செய்திகளை படித்து பார்ப்பதில்லை..
நீயாக தான் இருக்கும் என்று போன் ரிங்டோனுக்கும், மெசேஜ் நோடிபிகேஷனுக்கும் விழுந்தடித்து ஓடுவதில்லை..
கதறி அழ தோன்றும் நேரங்களில் உன் தோள்களை தேடுவதில்லை …
ஆம் நீ இன்றி வாழ பழகி கொண்டேன் இப்போதெல்லாம்…
எல்லாம் இயல்பாக இருப்பது போல தான் இருக்கிறது …
ஆனாலும் “ஏன் எப்பவும் எதையோ பறி கொடுத்த மாதிரியே இருக்க” என்ற பிறரின் கேள்விக்கு தான் பதில் தெரியவே இல்லை…
#காதல்_நீ..
#காயம்_நீ..




