மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாத் ஹெங்டி. இவர் தனது மகளை, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் சேர்ந்துள்ளார். இந்நிலையில், மகளை வேறு பள்ளியில் படிக்க வைக்க நினைத்த ஜெகநாத், இதுகுறித்து கடந்த 10ஆம் தேதி மகளின் பள்ளிக்குச் சென்று பேசியுள்ளார். மகளை வேறு பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த தாளாளரும், அவரது மனைவியும் ஜெகநாத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.




