நம்மில் பல பேருக்கு காலிஃப்ளவர் என்றாலே மிகவும் பிடிக்கும். இதை வைத்து சில்லி மஞ்சூரியன் ஆகியவை நாம் அடிக்கடி செய்வோம். இன்று காலிஃப்ளவரை வைத்து சுக்கா எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் – ஒன்று
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – தேவைக்கேற்ப
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
தாளிக்க :
பட்டை – ஒன்று
பிரியாணி இலை – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
கிராம்பு – இரண்டு
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – தேவைக்கேற்ப
செய்முறை :
காலிஃப்ளவரை பத்து நிமிடம் தண்ணீரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த காலிஃப்ளவரை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.
கொத்தமல்லி வெங்காயம் ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். தக்காளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து வேக வைத்து தோல் நீக்கி அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடான பிறகு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அரைத்து வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். அதில் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா சீரகத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் காலிஃப்ளவரை அதில் சேர்த்து கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைக்க வேண்டும். கடைசியாக மசாலா நன்றாக காலிஃப்ளவருடன் சேர்ந்தவுடன் என்னை பிரிந்து வரும்போது கொத்தமல்லி மிளகுத்தூள் ஆகியவற்றை தூவி இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான காலிஃப்ளவர் சுக்கா தயார்.



