கால்களில் இருக்கும் வெடிப்பிற்கான தீர்வுகள்..!!

Oplus_131072

தேங்காய் எண்ணெய் 200 மில்லி, விளக்கெண்ணை 200 மில்லி, கடைகளில் கிடைக்கும் வெண் குங்கிலியம் 35 கிராம், சாம்பிராணி பொடி 10 கிராம், மிளகு 60 கிராம். எண்ணெயை சூடு செய்து அதில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் பொடி செய்து கலக்கவேண்டும். நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆற வைத்து கலக்கி அதை பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுத்து உறங்கும் முன் வெடிப்புகளில் தேய்த்துவர பித்த வெடிப்பு உடனே நீங்கும். கிளிஞ்சில் , சுண்ணாம்புப் பொடி , விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர பித்த வெடிப்பு குணமாகும்.

பித்த வெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து ஒரு சிட்டிகை தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர பித்த வெடிப்பு சரியாகும். தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கொண்டு அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் பித்தவெடிப்பு மறைந்துபோகும் ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3 முதல் 4 முறை கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

Read Previous

எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள்..!!

Read Next

நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்.. பாட்டி வைத்தியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular