“காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவே இல்லையா?” – கிருஷ்ணசாமி கண்டனம்!

 

 

மதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பூசாரி பரமசிவம் மற்றும் தஞ்சையில் ஆகாஷ் என்ற இளைஞரை போலீசார் தாக்கி, கழுத்தை நெரித்து கைது செய்ததாக கூறப்படும் சம்பவங்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தவெக ஆட்சியில் காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவே கிடையாதா என முதலமைச்சர் விஜய்யிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும், காவல்துறையினரின் இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது சட்டம் ஒழுங்கிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடியில் புதிய மருத்துவமனை! முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular