“தமிழ்நாட்டையும் மக்களையும் எப்படி காப்பார்கள்?” – இபிஎஸ் கடும் விமர்சனம்!

 

 

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசை விமர்சித்தார்.

 

மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக 5 நாட்களுக்கு முன்பே கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்திருந்தும், இதுவரை அது எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.

 

மேலும், “மீனவர் உயிரிழப்பு போன்ற முக்கியமான விவகாரத்தில் பேச அனுமதிக்காதவர்கள் எப்படி தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

Read Previous

சட்டப்பேரவையில் பரபரப்பு! “ஆதாரம் என்னிடம் உள்ளது” – முதலமைச்சர் விஜய்!

Read Next

வண்டல் மண் விவகாரம்: சட்டப்பேரவையில் அதிமுக அமளி.. வெளிநடப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular