வண்டல் மண் விவகாரம்: சட்டப்பேரவையில் அதிமுக அமளி.. வெளிநடப்பு!

 

 

விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் விவகாரம் குறித்து இன்றே சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து, “கோபப்படாமல் நிதானமாகப் பேசுங்கள்” என எடப்பாடி பழனிசாமியிடம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுறுத்தினார். மேலும், வண்டல் மண் விவகாரம் தொடர்பாக நாளை விவாதிக்கப்படும் என சபாநாயகர் தெளிவுபடுத்தினார்.

 

ஆனால், இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Read Previous

“தமிழ்நாட்டையும் மக்களையும் எப்படி காப்பார்கள்?” – இபிஎஸ் கடும் விமர்சனம்!

Read Next

சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடியில் புதிய மருத்துவமனை! முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular