சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த மற்றொரு தனியார் கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மோதலில் ஈடுபட்ட 5 மாணவர்களைக் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.




