விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில், தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவண குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்தியதாகக் கூறி சரவண குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




