கிராமத்து ஸ்டைலில் கத்தரிக்காய் காரக்குழம்பு வேண்டுமா?.. 10 நிமிடத்தில் செய்யலாம்..!!

பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் கத்தரிக்காய் என்பது முக்கிய பங்கு வகிக்கும் காய்கறியாகும்.

சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை கட்டாயம் இருக்க தான் செய்யும்.

 

 

கத்தரிக்காய் வைத்து சம்பார் முதல் காரக்குழம்பு வைத்து செய்வதும் உண்டு. அந்தவகையில் எப்படி கத்தரிக்காய் வைத்து கிராமத்து ஸ்டைலில் காரக்குழம்பு செய்யலாம் என பார்க்கலாம்.

 

 

 

 

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 4

நல்லெண்ணெய் – 4

கடுகு – 1மேசைக்கரண்டி

 

சீரகம் – 1தேக்கரண்டி

வெந்தயம் – 1/2தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் -2

வெங்காயம் – 1

கறிவேப்பிலை

சின்ன வெங்காயம் – 25

பூண்டு – 25

தக்காளி – 1

உப்பு – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

தனியா தூள் – 2 தேக்கரண்டி

சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி

தண்ணீர் புளி கரைசல் – 1 கப்

வெல்லம் – 1 தேக்கரண்டி

 

 

செய்முறை

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

பிறகு கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

 

 

உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சாம்பார் பொடி சேர்த்து கலந்துவிடவும். பின்பு தண்ணீர் ஊற்றி மசாலாவை வேகவிடவும்.

அடுத்து புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து கலந்து கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

 

இறுதியாக வெல்லம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கினால் கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் காரக்குழம்பு தயார்.

Read Previous

தினமும் இரவில் ஏலக்காய் சேர்த்து பால் குடித்தால் என்ன நடக்கும்?..

Read Next

சாம்பிராணி தூபம் போடுவதற்கு காரணம் என்னனு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular