குடும்பத்துடன் கோதாவரி ஆற்றில் குதித்த உதவிப் பொறியாளர்: 10 வயது பேரன் உயிருடன் மீட்பு!

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் துறை உதவிப் பொறியாளர் கே. நூகராஜு, தனது மனைவி மீனா, கணவரை இழந்த மகள் சௌஜந்யா மற்றும் 10 வயது பேரனுடன் ராஜமகேந்திரவரத்தில் உள்ள கோதாவரி ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார்.

சௌஜந்யாவின் கணவர் உயிரிழந்த பிறகு, PRO ரைஃபிள் சூட்டிங் அகாடமி நடத்தி வரும் சாதிக் கான் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் வங்கிப் புத்தகங்கள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களைப் பறித்ததாகவும் நூகராஜு கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

சம்பவத்தின்போது, 10 வயது சிறுவன் தனது தாயை தற்கொலை செய்ய விடாமல் தடுக்க முயன்றபோது ஆற்றில் விழுந்துள்ளார். இருட்டில் 20 நிமிடங்களுக்கும் மேலாக நீந்தி உதவி கேட்டு அலறிய சிறுவனை அப்பகுதி மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

ஆற்றில் இருந்து நூகராஜுவின் உடலை மீட்பதுடன், குடும்பத்தினரைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள சாதிக் கானை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Read Previous

போனாலு பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற மாணவி லாரி விபத்தில் பலி!

Read Next

5 வருட கள்ளக்காதலை கைவிட்ட பெண்.. வீட்டிற்குள் புகுந்து தீவைத்த கொடூர காதலன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular