ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடாவில், ஸ்ரீநிவாஸ் என்பவரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நாகப்பாம்பை, அவர்கள் வளர்த்து வந்த பாக்சர் இன நாய் தடுத்து நிறுத்தி வீரமாகப் போராடியது.
இந்த மோதலின் போது நாய், பாம்பின் தலையைக் கவ்வி கொன்றது. ஆனால், சண்டையின்போது பாம்பின் விஷம் நாயின் உடலில் ஏறியதால் அது திடீரென உடல்நலக்குறைவுக்கு ஆளானது.
எஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்றிய அந்த செல்ல நாயை உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




