ஒரு தந்தை தன் நான்கு வயது மகளை அழைத்துக்கொண்டு பக்கத்து ஊருக்கு சென்றார். போகும் வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. அந்த ஆற்றைக்கடந்து தான் பக்கத்து ஊருக்கு போக முடியும்.
ஆற்றைக்கடக்க முற்பட்டபோது அந்த தந்தை தன் மகளிடம்
“ஆற்றைக் கடக்கும் வரை என் கையை பத்திரமாக பிடித்துக்கொள் ” என்று கூறினார். அதற்கு அந்த மகள்
“இல்லப்பா நீங்க என் கையை பிடிச்சுக்கோங்க” என்று கூறினாள்.
தந்தை ஆச்சரியமாக மகளிடம்,
“இரண்டுக்கும் அப்படி என்னம்மா வித்தியாசம்” என்று கேட்டார்.
அதற்கு அந்த மகள் “நான் உங்கள் கையை பிடித்துக் கொண்டால், பயத்தால் நடுவில் உங்கள் கையை விட்டாலும் விட்டுவிடுவேன் அப்பா ; ஆனால் நீங்கள் என் கையை பிடித்திருந்தால் எந்த நிலையிலும் என் கையை விட மாட்டீர்கள்” என்று கூறி நம்பிக்கையுடன் தன் தந்தையைப் பார்த்தாள். அந்த தந்தைக்கு மகளின் நம்பிக்கையைப் பார்த்து மிகவும் பெருமிதமாக இருந்தது…




