பெண்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததும், நான் படித்ததுமான உளவியல் உண்மைகள்..!! படித்ததில் பிடித்தது..!!

 

• பெரும்பாலும் அன்பையோ, காதலையோ வெளிப்படுத்துவதில் ஆண்கள்தான் முதல் படி எடுத்து வைப்பார்கள். ஆனால் ஒரு பெண் அதைச் செய்தால்.. அவளைவிட இந்த உலகத்தில் யாராலும் உங்களை நேசிக்கமுடியாது என்பது உண்மை.

 

• பெண்களால் அதிகபட்சமாக ரகசியத்தை காப்பாற்ற முடிந்த நேரம் 47 மணி நேரம்.

 

• பெண்ணை அன்புக்குரிய ஒருவர்.. இருபது நொடிகள் கட்டிப்பிடிக்கும்போது பெண்ணுக்கு மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

 

• பெண்களில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் நினைவாற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

• பெண்களின் மூளை, ஆண்களின் மூளையைவிட அளவில் சிறியதாக இருந்தாலும்.. புத்திக்கூர்மையில் எந்த வேறுபாடும் இல்லை.

 

• ஆண்களைவிட பெண்களால் மற்றவர்களின் முகங்களை எளிதாக நினைவுகூற முடியும்.

 

• ஆண்களை விட பெண்களுக்கு காம உணர்ச்சிகள் அதிகம், அதை அடக்கி ஆழ்வது.. ஆண்களைவிட பெண்களால் எளிதில் முடியும்.

 

• பெண்களால் அதிக வலியையும் பொறுத்துக்கொள்ள முடியும்.

 

• பெரும்பாலான பெண்கள் தங்கள் வலியை மௌனத்தால் மறைத்துக்கொள்ளக் கூடியவர்கள்.

 

• பெண்களால் மற்றவர்களின் உணர்ச்சிகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.. இதனால்தான் பெண்கள் அதிகம் உணர்ச்சிவசப் படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

 

• பெண்கள் அதிகம் அன்பு கொண்டவர்களிடம்.. எப்போதும் சண்டையிடவும், வாக்குவாதம் செய்யவும் விரும்புவார்கள்.

 

• ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும்.. அவளால் மறக்க முடியாத ஒரு ஆண் நிச்சயம் உண்டு.

 

• ஒரு விசயத்தில் முடிவு எடுப்பதில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். முடிவு எடுத்தபிறகு அதிலிருந்து அவர்களை மாற்றுவது மிகக் கடினம்….

Read Previous

குட்டிக்கதை..!! தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடந்த மனதை நெகிழ வைக்கும் உரையாடல்..!!

Read Next

கத்தரிக்காய் கொத்சு இப்படி செஞ்சு பாருங்க சுவை அட்டகாசமா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular