குதிகால் வெடிப்பை போக்க…
வெள்ளை வினிகர்:
வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வைத்து, மெருகேற்றும் கல்லைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்பு மறைந்து குதிகால் மென்மையாக இருக்கும்.
தயிர்:
தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.
தேன்:
வினிகரில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயிலை வினிகருடன் சேர்த்து கலந்து, குதிகால்களை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து, மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவினால், வினிகர் இறந்த செல்களை நீக்கி, ஆலிவ் ஆயில் வறட்சியை நீக்கும்.




