Oplus_131072
குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து..!! குறட்டை விடுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
குறட்டை உண்டாக காரணம் சுவாச பாதையில் இருக்கும் மின் திசுக்கள் வீக்கம் உற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது. இந்நிலையில் இந்த குறட்டை பிரச்சனையை சரி செய்ய இயற்கையான முறையில் மருந்து ஒன்று உள்ளது அது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து தேவையான பொருட்கள்:
மஞ்சள்
ஏலக்காய்
தேன்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும் இதில் ஏலக்காய் தட்டி போடவும் பின்பு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும் இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும் இதனை இரவு தூங்கப்போகும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்து வர குறட்டை ஒளி குறைந்துவிடும் சளிக்கு மருந்தாகவும் இது அமைகிறது இந்த மருந்து நெஞ்சக சளியை கரைக்கும் என்பதும் கூடுதல் பலன் ஆகும்.




