குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை அதிகரிக்கிறதா? இதை கவனியுங்கள்!

 

 

ஆன்லைன் வகுப்புகள், செல்போன், டிவி மற்றும் புத்தகங்களை நீண்ட நேரம் பார்ப்பது போன்ற காரணங்களால் குழந்தைகளின் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, கிட்டப்பார்வை (Myopia) அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கொரோனா காலத்துக்குப் பிறகு குழந்தைகளின் திரை நேரம் அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

 

குழந்தைகள் தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளிப்புறங்களில் இயற்கையான பகல் வெளிச்சத்தில் செலவிடுவது கிட்டப்பார்வை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இயற்கையான வெளிச்சம் கண்களில் டோபமைன் சுரப்பைத் தூண்டி, கண் விழி அதிகமாக நீள்வதைத் தடுப்பதன் மூலம் கிட்டப்பார்வை அபாயத்தை குறைக்க உதவலாம்.

 

குழந்தைகளின் திரை நேரத்தை குறைத்து, தினசரி வெளிப்புற விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

Read Previous

“சேகர்பாபு மீது கோபம் இல்லை; வருத்தம்தான்” – உதயநிதி ஸ்டாலின்!

Read Next

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 1½ வயது குழந்தை உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular