தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 1½ வயது குழந்தை உயிரிழப்பு!

 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கூவல்குட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த விஜயகுமார் என்பவரின் ஒன்றரை வயது மகன் நிதீஷ், எதிர்பாராதவிதமாக திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து, குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிற நீர்நிலைகள் இருந்தால் அவற்றை மூடி வைப்பதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

Read Previous

குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை அதிகரிக்கிறதா? இதை கவனியுங்கள்!

Read Next

இலங்கையை திணறடிக்கும் இந்திய பந்துவீச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular