புதிய கூகுள் கணக்குகளுக்கு இனி ஆரம்பத்தில் 5ஜிபி இலவச ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்படும் என்றும், முழுமையாக 15ஜிபி பெற தொலைபேசி எண் சரிபார்ப்பு அவசியம் என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. போலி கணக்குகள் மற்றும் பாட்களின் (Bots) பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை உறுதி செய்த பிறகே முழுமையான சேமிப்பக வசதியைப் பெற முடியும்.




