கூடுதலாக தமிழகத்திற்கு 1,120 பேருந்துகள்..!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!!
பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் சூழலில் பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூட்ட நெரிசல்களை தடுக்கும் விதமாக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களுக்கு கூடுதலாக 1,120 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.




