கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு 20% தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பேருக்கும் மொத்தமாக சேர்த்து மொத்தமாக ரூ.4.11 கோடி போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கும் உபரி தொகையை கணக்கில் கொண்டு 20% வரை போனஸ் வழங்கப்படும் என்றும், உபரி தொகை இல்லாத சங்கங்களில் பணிபுரிவோருக்கு 10% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




