கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: புதிய தகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு?..

 

 

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நகைக்கடன் தள்ளுபடிக்கான புதிய தகுதி விதிமுறைகளை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் தவறான விவரங்களை அளித்து கடன் பெற்றவர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், இந்த அறிவிப்பு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுவரை தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எதிர்பார்ப்புகளாக மட்டுமே கருதப்படுகின்றன.

Read Previous

சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!!

Read Next

டெல்லி போராட்டத்தில் பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு; வைரலாகும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular