சிக்கிம் மாநிலத்தில் தீஸ்தா (Teesta) நீர்மின் திட்டத்திற்காக கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
முதற்கட்ட தகவல்களில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் பிற மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.




