டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெண் ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்தப் பெண்ணிடம் “போராடுவியா நீ?” என்று கூறியபடி, டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் (DCP) தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விவாதம் நீடித்து வருகிறது.




