அரிய வகை நோயால் பதிப்பிக்கப்பட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.
சுனிதா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர், கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் செய்தார்.
இவருடன் மற்றோரு விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்ற நிலையில், வெறும் 10 நாட்கள் ஆய்விற்கு சென்ற இவர்கள், ஒன்பது மாத காலமாக ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் விண்வெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஸ்டார்லைனர் விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஆட்கள் இன்றி தனியாக பூமிக்கு வந்தது.
இந்த நிலையில், டிராகன் காப்ஸ்யூல் விண்வெளிக்குச் சென்று சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இணைக்கப்பட்டு இருந்தது. இதுவோ அமெரிக்க நேரப்படி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து திங்கள் மாலை பூமியை நோக்கி புறப்பட்டது.
21:57GMTக்கு அதிவேகமாக வந்து பூமியில் தரையிறங்கியது. அதில் சுனிதா வில்லியம்ஸுடன் நான்கு பேர் தரையிறங்கினர். இவர்களில் சுனிதாவுக்கு மட்டும் தாடையில் சுருக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், இது விண்வெளியில் இருந்து வந்த காரணத்தினால் ஏற்பட்ட Muscle atrophy ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




