கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டால்தான் பிரச்சனை தீருமா..?? நல்லது நடக்குமா..??

Oplus_131072

 

முதலில், ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் நம்மை இயக்குவது நாம் அல்ல இந்த பிரபஞ்சம்தான் ..
கோவிலுக்கு செல்ல வேண்டும் என சொன்னது எதனால் என்றால் மன மனமும் சரி ,உடலும் சரி அதிக நெகட்டிவ் அலைகளை கொண்டது நம் வாழ்வில்
இது நடக்க வேண்டும் என நாம் என்னும்போதே மின்னல் வேகத்தில் நடக்கலைன்னா என்ன பன்றது என உடனே ஒரு நெகட்டிவ் அலைகள் உங்களை மனதை எளிதாக அல்ல ஆழமாக தாக்கும் அதன்பின் உங்கள் மனம் சோர்வடையும் மனதில் குழப்பங்கள் எழும் ஒருவித பயம் நம்மை ஆட்கொள்ளும் இப்படியான சம்பவங்கள் எல்லோரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கும் நாம் அதை உணர்ந்திருக்க மாட்டாம் அவ்வளவுதான்

நம் வாழ்க்கையின் போராட்டம் மற்றவர்களுடன் அல்ல நமக்குள் இருக்கும் பாசிட்டிவ் அலைவரிசைக்கும் நெகட்டிவ் அலைவரிசைக்கும்தான்
இதை ,உணரத்தொடங்கி விட்டால் அதை எதிர்கொள்கிற வித்தையை கண்டுகொள்ளலாம்
கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்றால் , அங்கே அதிகம் இருப்பது பாசிட்டிவ் அலைகள்தான் ஏன் அங்கு பாசிட்டிவ் அலைகள் சில ஹோமங்கள் , ஆகம விதிமுறைப்படி செய்கிற பூஜைகள் என இருந்தாலும்
அங்கு, கெட்ட மனதுடைய ஒருவர் அங்கு நுழைந்தாலே அங்கு கோவிலில் உள்ளே இருக்கின்ற வரையாவது நல் எண்ணங்களுடன் இருப்பார் அவர் மட்டும் அல்ல அங்கு வரும் மக்கள் அனைவருமே மனதில் நல் எண்ணங்களில் இருப்பார்கள்

அப்போது,அங்கு பாசிட்டிவ் அலைகள் தானாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும்
பிரபஞ்சத்திற்கும் நமக்குமான தொடர்புகள் நெருங்கிவரும்
, கோவிலுக்கு செல்வது போஸ்ட் ஆபீஸ் மாதிரி நினைக்கிறார்கள் அங்கு போய் நமக்கு வேண்டயதை கேட்டு போஸ்ட் பன்னிவிட்டால் அது தானாக கடவுளுக்கு சென்று நம்மளக்கு தீர்வு அளிப்பார் என அது தவறு

உங்களுக்கு தேவையானவற்றை இந்த பிரபஞ்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது அதை நாம் கவனிக்கவில்லை அவ்வளவுதான்
எனக்கு கை,கால்,கண் கொடு என கேட்டா பெற்றோம், பிறந்தவுடன் நம் உடல் வளர்ச்சியை கேட்டா பெற்றோம் ,நடப்பதற்கு ,பேசுவதற்கு போன்றவற்றை கேட்டா பெற்றோம் இல்லையே அது பிரபஞ்சம் .கொடுத்தது அது தானாகவே கொடுக்கும்

நீங்கள், கோவிலுக்குத்தான் செல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்கள் ஊரின் உயர்ந்த மேடான இடத்திற்கு செல்லுங்கள் , பிரபஞ்சத்திடம் பேசுங்கள் பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் எதிர்ல வந்தா வணக்கம் சொல்லுவோம் இல்லையா அதைப்போல ஒரு வணக்கத்த போடுங்க
உங்கள், தேவைகளை கேட்காதீர்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள் போதும்
இதை பின்பற்றி பாருங்கள் , உங்கள் வாழ்வில் ஆச்சர்யத்தை உணர்வீர்கள் ஆனால், இந்த பிரபஞ்சத்தை முழுவதுமாக நாம் உணர உணர உள்வாங்க உள்வாங்க அது அதீதமாக வேலை செய்யும்

உங்கள் ஊரில் ,அப்படிபட்ட இடம் இல்லை என்றால் உங்கவீட்டு மாடியே போதும் ….
உங்கள் வாழ்வை அடியோடு மாற்றப்போகிற நல் மாற்றத்தின் முதல் புள்ளியாக இது அமையும்
பல ஊர்களில் உயரத்தில் மலைகளில் கோவில் அமைத்தது இதன் காரனமாகத்தான்…
சித்தர்கள் , ஞானிகள் அதில் போய் அமர்ந்ததும் அதற்காகத்தான்

இனி இந்த உலகத்தை கிரகங்களை ஆட்சி செய்யப்போகிறது பிரபஞ்சத்தை நாம் எப்படி பார்க்க முடியாதோ அதைப்போலவ நமகண்னுக்கு தெரியாதநிழல் கிரகம் என சொல்லப்படுகிற ராகுதான் பிரபஞ்சத்தோடு கைகோர்த்து ஆட்சி செய்யப் போகிறது
உங்கள் ஜாகத்தில் மனக்காரகனான ராகு, சந்திரனை பற்றி கொள்ளுங்கள் மனதை ஒருமுகப் படுத்துங்கள் தியானம் செய்ய கற்று கொள்ளுங்கள்.

Read Previous

மோட்சம் தரும் வன்னி இலை.. விநாயகருக்கு உகந்த வழிபாட்டு ரகசியம்..!!

Read Next

யாருக்கு மீண்டும் மறுபிறவி கிடையாது..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular