சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: அனைத்து தங்கப் பதக்கங்களையும் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை..!!

 

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் (IChO) போட்டியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் அனைத்து உறுப்பினர்களும் தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், இத்தகைய சாதனையை நிகழ்த்திய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் ஜூலை 10 முதல் 19 வரை நடைபெற்ற இந்த சர்வதேச போட்டியில், 93 நாடுகளைச் சேர்ந்த 363 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்திய மாணவர்களின் இந்த அபார வெற்றி, நாட்டின் அறிவியல் கல்வித் திறனை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளதுடன், கல்வித்துறையில் புதிய மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.

Read Previous

தாய்மாமன் – அன்பும் அரவணைப்பும் நிறைந்த உறவு..!! அருமையான பதிவு..!!

Read Next

‘ஜனநாயகன்’ பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்துவது வெட்கக்கேடு – டிடிவி தினகரன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular