மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய அமைச்சர்கள், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்துவது வெட்கக்கேடானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளின் தரத்தை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நலன், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அடிப்படை சேவைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், நிர்வாகத்தின் முழு கவனமும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலேயே இருக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.




