சிட்டி யூனியன் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (IBA) வழங்கும் IBA Technology Awards இல் 6 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த விருதுகள், ஜனவரி 9, 2026 அன்று மும்பையில் நடைபெற்ற 21வது ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டில் வழங்கப்பட்டன. சிறந்த செயற்கை நுண்ணறிவு, சிறந்த தொழில்நுட்ப வங்கி, சிறந்த டிஜிட்டல் நிதி உள்ளடக்கம், சிறந்த டிஜிட்டல் விற்பனை, சிறந்த தகவல் தொழில்நுட்ப இடர் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.




