இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்கள், தொழிலதிபர்களை கவர்ந்து வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் வசூலித்த தம்பதியை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். கரீம்நகரில் வசித்த இந்த தம்பதி இதுவரை சுமார் 100 பேரை சிக்கவைத்ததாக கூறப்படுகிறது. ஒரு பாதிக்கப்பட்டவரிடமிருந்து ரூ.14 லட்சம் வசூலித்து மேலும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதை தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.




