தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை நிறைவடைந்த பிறகு காவல்துறையினர் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “சிறையில் எனக்கு எல்லாமே மிகவும் சௌகரியமாக இருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்” என்று சிரித்தபடியே கூறியதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், வீடியோ இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
அப்போ பத்து ரூபாய் செந்தில் பாலாஜி போல் இன்னும் ஒரு வருஷத்துக்கு பாளையங்கோட்டை சிறையிலேயே இருக்க வேண்டியதுதானே?
என்ன மயி* க்கு ஜாமீன் கேக்குறே? pic.twitter.com/G3lpKwzyl2
— கழுகுப்பார்வை 🦅🇮🇳 (@TheEagle3_0) July 22, 2026




