முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்-அப் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஏற்கனவே ரூ.200-க்கு டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள், கூடுதலாக ரூ.500-ஐ QR கோடு மூலம் செலுத்த வேண்டும் என்றும், இதனால் டிக்கெட் கட்டணம் ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட திரையரங்கு நிர்வாகம் அல்லது அதிகாரிகள் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.




