வாரம் இரண்டு முறை வீட்டில் இதை பண்ணி பாருங்க..! செல்வம் செழிக்கும்..!!

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிகிறதோ அங்கு தான் பணம் செல்வம், ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி என்பது நிறைந்து இருக்கும். மேலும், எந்த ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதோ அங்கு தான் லட்சுமி கடாட்சம் இருக்கும். இதை தெரியாமல் உங்களில் பலர் வீட்டை சுத்தமாகவே வைத்திருப்பதில்லை. பண்டிகை காலங்களில் மட்டும் தான் வீட்டை துடைத்து அலங்கரிக்கிறீர்கள். மேலும் வீட்டில், கிழிந்த துணிகள், உடைந்த பொருட்கள், அதிகமான குப்பைகள், ஒட்டடை போன்றவை இருக்கிறதோ அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது. லட்சுமி கடாட்சம் இருக்க வீட்டை வெள்ளி மற்றும் செவ்வாய் இந்த இரண்டு நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டையும் பூஜை அறையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக உப்பு ஜாடியில் உப்பு எப்பொழுதும் நிரம்பி வழிய வேண்டும். அப்பொழுதுதான் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும். மேலும் வீட்டு வாசலில் அரிசி மாவு கொண்டு கோலமிடுவது, பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற நல்ல செயல்களை பின்பற்றி வந்தால் அந்த வீட்டில் லட்சுமி தாயார் இருப்பார். அதுமட்டுமின்றி பூஜை அறையில் காலை மற்றும் மாலை இரு வேலையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் மண்ணாகல் அல்லது காமாட்சி விளக்கு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு துன்பம் ஏற்றி வழிபட்டு வந்தால் பணக்கஷ்டம் நீங்கி பல மடங்கு வரவு அதிகரிக்கும். காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை செய்வதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கி பணவரவு அதிகரிக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி கடாட்சம் முழுவதுமாக வீட்டில் குடிப்புழந்து செல்வம் பொங்கும்.

Read Previous

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும்..?? யார் யாரெல்லாம் சாப்பிடலாம்னுதெரிஞ்சிக்கோங்க…!!!

Read Next

பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular