Oplus_16908288
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொது–தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது ஆலையின் செயல்பாடுகள், கரிமக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் நடைமுறை, தினசரி செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்.
பொது–தனியார் பங்களிப்பில் செயல்படும் இந்த உயிரி எரிவாயு ஆலை, நகரில் சேகரிக்கப்படும் கரிமக் கழிவுகளை பயனுள்ள எரிசக்தியாக மாற்றும் நோக்கில் இயங்கி வருகிறது. இந்த ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.




