சேலம் அருகே சமூக நீதி மாணவியர் விடுதியில் தங்கிப் படிக்கும் இரு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மாணவிகளுக்கு வழங்கிய பின்னர், அவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ரகுபதி என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் விடுதியின் தூய்மைப் பணியாளர் ராதிகாவுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும்.




