பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, “Uber அதிகாரப்பூர்வ இணையதளம்” செயலியில் ரயில் டிக்கெட்டுகளை நேரடியாக முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதுடன், பயணிகள் தங்களது PNR நிலையை செயலி வாயிலாகவே தெரிந்துகொள்ள முடியும்.
ஏற்கனவே ஆட்டோ, கார், பைக், மெட்ரோ மற்றும் பேருந்து போன்ற பல்வேறு போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் Uber, தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு வசதியையும் தனது செயலியில் இணைத்துள்ளது. இதனால் ஒரே செயலி மூலம் பல்வேறு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் வசதி பயணிகளுக்கு கிடைத்துள்ளது.




