அழியும் நிலையில் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உருவாகியுள்ள ‘லயன் நெபுலா’ எனப்படும் விண்வெளிப் பகுதியின் மிகத் தெளிவான மற்றும் வண்ணமயமான புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
இந்த நட்சத்திரத்தின் வெளிப்புற அடுக்குகள் மெல்ல விண்வெளியில் உதிர்ந்து வருவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வெளியேறும் வாயுக்கள் மற்றும் தூசிகள் இணைந்து பிரமிக்க வைக்கும் நெபுலா அமைப்பை உருவாக்கியுள்ளன.
மேலும், இந்த வாயுக்கள் மற்றும் தூசிகள் அடுத்த சுமார் 10,000 ஆண்டுகளில் படிப்படியாக விண்வெளியில் கலைந்து மறைந்துவிடும் என வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். நாசா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.




