ஜப்பானில் வரலாறு காணாத பிறப்பு சரிவு.. 12 கோடிக்கும் கீழ் மக்கள் தொகை..!!

 

 

ஜப்பானில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 12 கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது.

 

பிறப்பு விகிதத்தை உயர்த்த அரசு பல்வேறு ஊக்கத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்திருந்தாலும், இந்த ஆண்டு வெறும் 6.7 லட்சம் பிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது ஜப்பானின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

 

மக்கள் தொகை தொடர்ந்து குறைவதால், தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை போன்ற சவால்களை ஜப்பான் அரசு எதிர்கொண்டு வருகிறது.

Read Previous

இந்தியாவில் அறிமுகமான கூகுளின் புதிய AI ஏஜென்ட்.. 24 மணி நேரமும் உங்களுக்காக வேலை செய்யும் ‘ஜெமினி ஸ்பார்க்’..!!

Read Next

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.. அமெரிக்கா – சவூதி கூட்டுப் பதிலடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular