ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி போன்ற விவரங்களை ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. ‘Myaadhaar’ இணையதளம் வழியாக பயனர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து இந்த வசதியை பெற முடியும். பதிவேற்றப்படும் ஆவணங்கள் தெளிவாகவும், ஆதாரில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகும்படியும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




