பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தகைய சட்டத்தை அமல்படுத்தும் முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தவும், மனநலத்தைப் பாதுகாக்கவும், இணையப் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், அதன்பிறகு 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




