75 வயது ஆண் .. தன் மனைவியுடன் வாழ்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார்..
❤ நாற்பதைந்து வருடம் – ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….
❤ என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….
❤ அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்…
❤ ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்…
❤ ஒரு நாளாவது அவளுக்கு பதில் – நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்…
❤ ஒரு நாளாவது TV யையும், Mobile லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்…
❤ ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்…
❤ ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் – அவளை சினிமாவுக்கு அழைத்து சென்று இருக்கலாம்…
❤ ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்…
❤ அவள் விரும்பி கேட்காத போதும் – ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்…
❤ ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்…
❤ ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்…
❤ நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்…
❤ நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்…
❤ அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்…
❤ அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் – அவளை
கவனித்து இருக்கலாம்…
❤ அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்…
❤ என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்…
❤ நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்…
❤ என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை…
❤ தேநீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது…
❤ என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்…
❤ நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு…
❤ ஒரு முழப் பூவாவது ஒரு நாளாவது உனக்கு வாங்கி தராதவன் நான்…
❤ மூச்சு இழந்த – உன் புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்…
மனைவியே! என்னை மன்னித்து விடு…
❤ மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய்..!!




