தமிழகத்தில் மாறிவரும் உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் துரித உணவுகளின் அதிகரித்த பயன்பாடு காரணமாக உடல் பருமன் மற்றும் தொற்றா நோய்களின் பாதிப்பு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 44.2% பெண்களும், 38.8% ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தங்களது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 80% வரை அதிகரிக்கக்கூடும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.
ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் முறையான வாழ்க்கை முறையை பின்பற்றுவது தொற்றா நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




